கொஸ்து / பாம்பே சட்னி

ஏப்ரல் 10, 2008

தேவையான பொருட்கள்
********************
பெரிய வெங்காயம் : 2
தக்காளி:1
உருளைக்கிழங்கு:2
பச்சைமிளகாய்:5/6
கடலை பருப்பு: 1 பிடி
கடலை மாவு : 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் : சிறிதளவு
கடுகு,உளுந்து : தாளிக்க
உப்பு தேவையான அளவு
மல்லி இலை

செய்முறை:
**********
முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

வெங்காயம், தக்காளி இவற்றை மெலிதாக நீளவாக்கில் நறுக்கவும் (1 inch நீளம்). பச்சைமிளகாயை நீளவாக்கில் கீறிக் கொள்ளவும்.

கடாயில் எண்ணை ஊற்றி கடுகு, உளுந்து போட்டு தாளித்து உடன் கடலை பருப்பையும்சேர்த்து வதக்கவும், பின்னர் பச்சை மிளகாயும் சேர்த்து வதக்கவும்.

பச்சை மிளகாய் படபடப்பு அடங்கியதும் வெங்காயம் சேர்த்து வதக்கி உடன் தக்காளியும் சேர்த்து வதக்கி மூடிவைக்கவும்.

5 நிமிடத்திற்கு பிறகு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கிளறி நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கையும் சேர்த்து கிளறவும்.

சிறிதளவு தண்ணீர் சேர்த்து கிளறி பாத்திரத்தை மூடவும்.

கடலை மாவை சிறிதளவு தண்ணீரில் கலந்து தயாராக வைத்துக்கொள்ளவும்.

கொதி வந்தவுடன் கடலைமாவு தண்ணீரை உருளைக்கிழங்கு கலவையில் ஊற்றி நன்றாக கிளறவும்.

5 நிமிடம் சென்றபின் கிளறி கொத்துமல்லி தூவி கிளறவும்.

கொஸ்து தயார்.

இது சப்பாத்தி, பூரி, தோசை, இட்லி இவற்றுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

குறிப்பு:
******
தண்ணீர் சிறிதளவு பயன்படுத்தினால் போதும் இல்லையேல் குழம்பு போல் ஆகிவிடும்.
மிளகாய் காரத்திற்கு ஏற்ப பயன் படுத்தவும்.
உருளைக்கிழங்கு இல்லாமலும் தயாரிக்கலாம்.

Entry Filed under: கறி/கூட்டு. குறிச்சொற்கள்: , , .

3 Comments Add your own

  • 1. ILA  |  ஏப்ரல் 10, 2008 at 11:16 மு.பகல்

    .கொஸ்துவா? கொத்ஸா?

    பதில்
  • 2. கீதா  |  ஏப்ரல் 10, 2008 at 6:16 பிற்பகல்

    எங்க வீட்டுப் பக்கம் இதை கொஸ்துன்னு தான் சொல்லுவாங்க.

    கொத்ஸுன்னும் கத்திரிக்காய் போட்டு வேற மாதிரி ஒன்னு செய்வாங்க

    :)

    பதில்
  • 3. kalyanakamala  |  ஏப்ரல் 11, 2008 at 8:24 மு.பகல்

    இது உருளைக்கிழங்கு மசாலா அல்லது பூரி கிழங்கு மசாலா.கொத்சு என்பது வெங்காயம் அல்லது கத்தரிக்காய் போட்டு செய்வதுதான்!
    அன்புடன்
    கமலா

    பதில்

Leave a Comment

Required

Required, hidden

Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


பக்கங்கள்

அண்மைய இடுகைகள்

வகைகள்

வகை மேகம்

Uncategorized கறி/கூட்டு குழம்பு வகைகள் கொரிக்க சட்னி/chutney சாத வகைகள் சிற்றுண்டி வகை பலகார வகைகள் வாங்க பேசலாம்

என் மற்ற தளங்கள்

மேல்