வெஜ்/முட்டை/சிக்கன் ஃப்ரைட் ரைஸ் (vegetable / egg /chicken fried rice )
ஏப்ரல் 14, 2008
தேவையான் பொருட்கள்: (இரண்டு பேருக்கு)
********************
பாசுமதி அரிசி : 1 கப்
முட்டை கோஸ் : 1/4 கிலோ (பொடியதாக நீளவாக்கில் நறுக்கவும்)
கேரட் : 1 (பொடியதாக நறுக்கவும்)
வெங்காயத் தாள்: 5 (பொடியதாக நறுக்கவும்)
கொடைமிளகாய் : 1 (சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்)
வெங்காயம்: 1 சிறியது ( நீளவாக்கில் நறுக்கியது)
பீன்ஸ் : 10 (பொடியதாக நறுக்கியது)
மிளகு தூள்: சிறிதளவு
சோயா சாஸ் : 2 தே. கரண்டி
அஜினமோட்டோ: 1 1/2 தே. கரண்டி
உப்பு தேவையான அளவு
எண்ணை 1/4 கப்
முட்டை : 2
செய்முறை:
**********
பாசுமதி அரிசியை நன்கு களைந்து ஒரு தே. கரண்டி எண்ணையுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிடவும்.
வெந்த பின் வாயகன்ற பாத்திரத்தில் கொட்டி நன்றாக ஆற விடவும்.உதிரி உதிரியாக இருக்க வேண்டும். முக்கால் பாகம் வெந்தால் போதும்.(முதல் நாளே செய்து ப்ரிட்ஜிலும் வைத்து விடலாம்)
முட்டையில் 2 தே.கரண்டி எண்ணை, உப்பு, மிளகு தூள் சேர்த்து பொரித்து தனியாக வைக்கவும்.
கனமான பாத்திரத்தில் சிறிது எண்ணை விட்டு வெங்காயம்,முட்டைகோஸ், கேரட், வெங்காயத்தாள்,குடைமிளகாய்,பீன்ஸ் ஆகியவற்றை போட்டு வதக்கி மூடி வைக்கவும். (தண்ணீர் விடக்கூடாது).
சிறிது நேரத்திற்கு பின் சோயா சாஸ், அஜினமோட்டோ, உப்பு இவற்றை சேர்த்து கிளறி உடன் சாதத்தையும் போட்டு கிளற மூடி வைக்கவும்.
சிறிது நேரத்திற்கு பின் பொரித்த முட்டையை போட்டு கிளரி விடவும்.
சுவையான வெஜிடபில்/முட்டை ப்ரைட் ரைஸ் ரெடி
சிக்கன் ப்ரைட் ரைஸ் செய்ய
************************
மேற்கண்ட செய்முறையில் பொரித்த முட்டைக்கு பதிலோ அல்லது முட்டையுடனோ சேர்க்கலாம்.
1) தேவையான அளவு சிக்கனுடன் தண்ணீரில் உப்பு, மிளகு தூள் சேர்த்து வேகவைத்து உதிர்த்து வைத்துக்கொள்ளவும். கடைசியாக சேர்த்து கிளறி விடவும்.
2)சிக்கனை சிறிய துண்டுகளாக்கி அதில் உப்பு,மிளகாய்தூள்,சிறிதளவு எலுமிச்சை சாறு,கேசரிபொடி,சிறிதளவு கடலை மாவு போட்டு பிசறி விடவும்.
கொஞ்சம் கொஞ்சமாக அதனை எண்ணையில் போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொண்டு இறுதியாக சாதத்தில் கிளறிவிடவும்.
குறிப்பு:
******
தேவைப்பட்டால் சில்லி சாஸ் சேர்த்துக்கொள்ளவும் காரத்திற்கு.
அஜினமோட்டோ , வெங்காயம் இவை தேவையில்லையென்றால் ஒதுக்கி விடவும்.
சூடாக பரிமாறவும் (இல்லையேல் சாதம் விறைத்துவிடும்)
ஹொட் / டொமேடோ சாஸுடன் பரிமாறவும்.
Entry Filed under: சாத வகைகள். குறிச்சொற்கள்: சமையல் குறிப்பு, சிக்கன், ப்ரைட் ரைஸ், முட்டை, வெஜிடபில், chicken, egg, fried rice, vegetable.
4 Comments Add your own
Leave a Comment
Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
ரவிசங்கர&hellip | ஏப்ரல் 21, 2008 at 8:50 பிற்பகல்
வேர்ட்பிரெஸ் தமிழாக்கம் கருத்த உங்கள் கருத்துகள், வழு அறிக்கைகள், பங்களிப்புகளைத் தர http://groups.google.com/group/tamil_wordpress_translation குழுமத்துக்கு வரவேற்கிறோம். நன்றி.
2.
raman | ஜூலை 18, 2008 at 6:47 மு.பகல்
i,am staying from singapore your recipes is very good and useful for me because i don’t cooking thank U
3.
ARUSHINI | செப்டம்பர் 3, 2008 at 5:56 மு.பகல்
TAMIL A SAMAIYAL KURIPPUGAL THANTHATHUKKU ROMBA THANK PANREN…NAN CHICKEN FRIED RICE SENCHU TASTE PANNI PARTHEN ROMBA SUPERA IRUNTHUCHU..INUM NIRAYA KURIPPUKKAL THANGA.NAN TASTE PANNA READYA IRUKEN.
4.
Jeyaganesh | ஏப்ரல் 23, 2009 at 12:54 மு.பகல்
very nice