கட்லெட் (Vegetable cutlet)

ஏப்ரல் 25, 2008

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு : 7
குடைமிளகாய் : 1 (சிறு துண்டுகளாக நறுக்கியது)
கேரட்,பீட்ரூட்,பட்டாணி போன்ற விருப்பமான காய்கறிகள் : 2 கப் (நன்றாக நறுக்கியது)
பிரட் கிரம்ஸ் : 1 கப்
சோளமாவு/மைதா மாவு : 2 அல்லது 3 ஸ்பூன்
எண்ணை தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
சிறிதளவு சோம்பு (உடைத்தது.)

செய்முறை:

* முதலில் உருளைக்கிழங்கை நன்றாக வேகவைத்து தண்ணீர்விடாமல் கெட்டியாக மசித்து வைத்துக்கொள்ளவும்.

*வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் சோம்பு போட்டு பின்னர் குடைமிளகாய், காய்கறிகளை அதில் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி முக்கால் பாகம் வேகும் வரை வைத்திருக்கவும். (தண்ணீர் சேர்க்கக் கூடாது)

*இந்த காய்கறிக் கலவையை மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்குடன் சேர்த்து நன்றாக பிசையவும். மிகவும் இலகுவாக இருந்தால் சிறிதளவு சோளமாவு சேர்த்துக் கொள்ளலாம்.

*ஒரு அகலமான தட்டில் பிரட் கிரம்ஸ் கொட்டி பரவலாக வைக்கவும். மற்றொரு தட்டில் சிறிதளவு தண்ணீருடன் சோளமாவு/மைதாமாவு சேர்த்து கரைத்து வைத்துக்கொள்ளவும்.

*காய்கறிக் கலவையை சிறிய உருண்டைகளாக்கி தட்டி(வடைக்கு செய்வது போல் சற்று தடிமனாக) அதனை சோளமாவு கலவையில் புரட்டி பின்னர் பிரட் கிரம்ஸில் புரட்டி தனியாக வைக்கவும்.(மாவு இலகுவாக இருந்தால் புரட்டும்போது உடைந்துகொள்ளும் கவனமாக செய்யவும்)

*எல்லா கலவையும் இப்படி செய்து முடித்தபின் இந்த கட்லெட் டை அரைமணி நேரம் ஃபிரிட்ஜில் வைத்திருந்து எடுக்கவும்.

*பின்னர் ஒரு தோசைக்கல்லில் சிறிது எண்ணைவிட்டு கட்லெட்டுகளை போட்டு செந்நிறாமாக வருத்து எடுக்கவும். ஒரு பக்கத்துக்கு சுமார் 2 நிமிடம் இருந்தால் போதும்.

*சுவையான கட்லெட்டை டொமாடோ சாஸுடன் பரிமாரவும்.

குறிப்பு:
இதை எண்ணையில் பொரித்தும் எடுக்கலாம் ஆனால் கலவை சரியாக இல்லையெனில் தனித்தனியாக பிய்ந்து விடும் கவனம்.

தண்ணீர் சேர்க்காமல் செய்யவும் அப்பொழுதுதான் சரியான பதத்துக்கு கலவை கிடைக்கும்.

உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை சேர்க்கலாம்.

பிரட் கிரம்ஸ் இல்லையென்றால் சில பிரட் துண்டுகளை தோசைக்கல்லில் போட்டு எடுத்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

Entry Filed under: பலகார வகைகள். குறிச்சொற்கள்: , , .

Leave a Comment

Required

Required, hidden

Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


பக்கங்கள்

அண்மைய இடுகைகள்

வகைகள்

வகை மேகம்

கறி/கூட்டு குழம்பு வகைகள் கொரிக்க சட்னி/chutney சாத வகைகள் சிற்றுண்டி வகை பலகார வகைகள் வாங்க பேசலாம் Uncategorized

என் மற்ற தளங்கள்

மேல்