பச்சரிசி ஹல்வா (Rice Halwa)
ஏப்ரல் 28, 2008
என் அம்மா எப்பவும் செய்யும் ஒரு பலகாரம் இது, அரிசி ஹல்வான்னுதான் சொல்லிப் பழக்கம் வேறு பெயர் இருக்கா தெரியலைங்க.
தேவையான பொருட்கள் ( 4 பேருக்கு)
_______________________
பச்சரிசி மாவு : 2 கப்
கடலை பருப்பு : 1 கப்
வெல்லம் : 11/2 கப்
நெய் : 1/2 கப்
முந்திரி, ஏலப்பொடி சிறிதளவு
செய்முறை:
___________
*அரிசிமாவுடன் தண்ணீர் சேர்த்து தோசைமாவு பதத்திற்கு கரைத்து வைக்கவும்.
*சிறிதளவு நெய்யில் முந்திரி பருப்பை வறுத்து எடுத்து வைக்கவும்.
*ஒரு கனமான பாத்திரத்தில் கடலைபருப்புடன் 3 கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். குழையக் கூடாது ஓரளவுக்கு திடமாக இருக்க வேண்டும்.
*பருப்பு வெந்தவுடன் அதில் அரிசிமாவுக் கரைசலை ஊற்றி கிளறிக்கொண்டே இருக்கவும். மாவு வெந்துவரும். (தண்ணீர் கையில் தொட்டு மாவை தொட்டுப் பார்த்தால் ஒட்டாது இருக்க வேண்டும் இதுதான் பதம்.)
*வெல்லத்துடன் சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து வடிகட்டவும். இந்த வெல்லத்தண்ணீரை சிறிது நேரம் அடுப்பில் வைத்து கொதிக்கவைத்து வெந்த அரிசிமாவுடன் சேர்த்துக் கிளறவும்.
*முந்திரி , ஏலப்பொடி, நெய் சேர்த்து கிளறி விடவும்.
*பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்பொழுது இறக்கிவிடவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் நெய் தடவி அதில் இந்த பச்சரிசி ஹல்வாவை ஊற்றவும். ஆறினதும் பரிமாறவும்.
குறிப்பு:
______
ஹல்வாவை கிண்டிக்கொண்டே இருக்கவேண்டும் இல்லையெல் அடிபிடித்து விடும்.
பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்பொழுது இறக்கிவிடவும்.ரொம்ப கெட்டியாவும் இருக்க கூடாதுங்க ![]()
உங்களுக்கு விருப்பமான நெய் இன்னும் சேர்த்துக்கலாம். சாப்பிட நல்லாயிருக்கும் ஆனா உடம்புக்கு ஆகாதில்லையா?
(அப்படிப்பார்த்தா வெல்லம்,அரிசி மாவும், முந்திரி,பருப்பு… ஹலோ.. அப்ப ஹல்வாவை எப்படித்தான் கிண்டுறது ??
)
Entry Filed under: பலகார வகைகள். குறிச்சொற்கள்: அரிசி, அல்வா, சமையல் குறிப்பு, பலகார வகை, ஹல்வா, halwa.
2 Comments Add your own
Leave a Comment
Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
tia | ஏப்ரல் 28, 2009 at 2:11 மு.பகல்
very nice item……
2.
kokila | ஜூலை 8, 2009 at 2:53 மு.பகல்
very nice recepie