ரவா பொங்கல் / Rawa pongal
ஏப்ரல் 29, 2008
தேவையான பொருட்கள் (2 பேருக்கு)
_________________________________
ரவை – 1 1/2 கப்
பயத்தம் பருப்பு – 1/2 கப்
முந்திரி – சிறிதளவு
மிளகு – 1 தே. கரண்டி
சீரகம் – 1 தே. கரண்டி
இஞ்சி – சிறு துண்டு
பச்சை மிளகாய் – 1 அல்லது 2
உப்பு தேவையான அளவு
நெய் தாளிக்க
செய்முறை
___________
*நெய்யில் முந்திரி பருப்பை வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
*மிளகு , சீரகம் வறுத்து லேசாக பொடித்து தனியே வைக்கவும்.
*பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறிக்கொள்ளவும். இஞ்சியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
*ஒரு பாத்திரத்தில் 5 கப் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்துக்கொள்ளுங்கள்.
*பயத்தம் பருப்பை நெய்யில் லேசாக வறுத்து 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். முக்கால் பாகம் வெந்ததும் தனியே எடுத்து வைக்கவும்.
*ஒரு வாணலியில் நெய் ஊற்றி இஞ்சி பச்சை மிளகாய் போட்டு தாளித்து அதில் ரவையையும் கொட்டிக் கிளறுங்கள். வேண்டிய அளவு உப்பு சேருங்கள். பச்சை வாசனை போகும் வரை கிளறுங்கள்.
*அடுப்பை சிம்மில் வைத்து ரவையுடன் பயத்தம் பருப்பை கொட்டிக் கிளறி உடன் கொதித்த நீரையும் ஊற்றுங்கள். கெட்டிப்படாமல் நன்றாகக் கிளறி பாத்திரத்தை மூடி வைக்கவும்.
*சிறிது நேரம் கழித்து மிளகு, சீரகம்,முந்திரி ஆகியவற்றைக் கொட்டிக் கிளறவும், கறிவேப்பிலை தூவி இறக்கவும்.
*சூடாக தேங்காய் சட்டினியுடன் பரிமாரவும்.
Entry Filed under: சிற்றுண்டி வகை. குறிச்சொற்கள்: சமையல் குறிப்பு, ரவா பொங்கல், rawa pongal.
3 Comments Add your own
Leave a Comment
Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
ரூபா வெங்&hellip | மே 9, 2008 at 5:46 மு.பகல்
ரொம்ப நல்ல இருந்தது. நன்றி கீதா.
2.
தூயா [Thooya] | மே 11, 2008 at 6:33 மு.பகல்
நானும் முயற்சி செய்துள்ளேன்.
3.
கீதா | மே 23, 2008 at 8:46 பிற்பகல்
நன்றி ரூபா, தூயா