ஃப்ரைட் இட்லி / fried idly

மே 22, 2008

தேவையான பொருட்கள்

மீதமான இட்லிகள் : 5/6
மைதா மாவு : 5 தே. கரண்டி
மிளகாய்த் தூள்: 1 தே. கரண்டி (உங்கள் தேவைக்கு ஏற்ப)
பிரட் கிரம்ஸ்: 1/2 கப்
உப்பு : தேவையான அளவு
எண்ணை பொரித்தெடுக்க

செய்முறை:

இட்டிலியை 8 துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் மைதாமாவு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும். (பஜ்ஜி மாவு பதத்திற்கு)

ஒரு அகலமான தட்டில் பிரட் கிரம்ஸை கொட்டி பரவலாக வைக்கவும்.

இட்டிலி துண்டுகளை மைதாமாவு கலவையில் புரட்டி, பிரட் கிரம்ஸில் புரட்டி தனியே வைக்கவும்.

அடுப்பில் வாணலி வைத்து எண்ணை ஊற்றி காய்ந்ததும் இட்டிலி துண்டுகளை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு நன்றாக வறுத்து எடுக்கவும்.

தக்காளி சாசுடன் மாலை உணவாக, தேனீர்/காஃபியுடன் பரிமாறலாம்.

உங்களுக்கு விருப்பனால்

வெங்காயம் – 1 (நீளவாக்கில் மெலிதாக நறுக்கியது)
தக்காளி – 1 (பொடிதாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 3அல்லது4
கடுகு,உளுந்து – தாளிக்க
உப்பு சிறிதளவு
தக்காளி சாஸ் – 2 தே. கரண்டி
ஃப்ரைட் இட்லி துண்டுகள்

வாணலியில் சிறிது எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு உளுந்து போட்டு தாளிக்கவும்.

பச்சை மிளகாய் , வெங்காயம், தக்காளி, ஆகியவற்றையும் போட்டு நன்றாக வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

நன்றாக வதங்கியதும் தக்காளி சாஸ் ஊற்றி கிளறவும்.

சிறிது நேரம் சென்றபின் ஃப்ரைட் இட்லி துண்டுகளை சேர்த்து கிளறிவிடவும்.

இதை அபெடைசராக பரிமாறலாம்.

Entry Filed under: சிற்றுண்டி வகை. குறிச்சொற்கள்: , , .

3 Comments Add your own

  • 1. சிங்  |  மே 22, 2008 at 8:20 பிற்பகல்

    அரிசி விலையும் தங்கம் விலைக்கு வந்திடும் போல .ஒரு கிலோ 4 யூஎஸ் டாலருக்கே கிடைக்கமாட்டெங்குது. இதுல மீந்து போன இட்டிலி………டிரை பண்ணுவோம் :-)

    பதில்
  • 2. கீதா  |  மே 22, 2008 at 9:11 பிற்பகல்

    :)

    பதில்
  • 3. kannan  |  ஆகஸ்ட் 9, 2009 at 10:38 மு.பகல்

    Mikavum arumaiyaana recipe.

    பதில்

Leave a Comment

Required

Required, hidden

Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


பக்கங்கள்

அண்மைய இடுகைகள்

வகைகள்

வகை மேகம்

Uncategorized கறி/கூட்டு குழம்பு வகைகள் கொரிக்க சட்னி/chutney சாத வகைகள் சிற்றுண்டி வகை பலகார வகைகள் வாங்க பேசலாம்

என் மற்ற தளங்கள்

மேல்