பயத்தம்பருப்பு தோசை/ மூங் தால் தோசை / moong dal dosai

மே 23, 2008

தேவையான பொருட்கள் 2 பேருக்கு

பயத்தம்பருப்பு [சிறுபருப்பு] – 1 கப்
தயிர் – 1/2 கப்
பச்சை மிளகாய் – 5 அல்லது 6
பூண்டு – 3 அல்லது 4 பல்
உப்பு தேவையான அளவு

செய்முறை

பயத்தம் பருப்பை தாராளமாக தண்ணீர் விட்டு 5 அல்லது 6 மணி நேரம் ஊரவிடவும்.

நன்கு ஊரியதும் பச்சை மிளகாய், பூண்டு,தண்ணீர் சேர்த்து மிருதுவாக அரைத்துக்கொள்ளவும்.

அரைத்த மாவில் தயிர்,உப்பு சேர்த்து நன்றாக தோசை மாவு பதத்திற்கு கலந்து வைத்துக்கொள்ளவும்.

தோசைகளை வார்த்து எடுத்து தேங்காய் சட்டினியுடன் சூடாக பரிமாறவும்.

குறிப்பு

மாவில் தண்ணீர் அதிகமிருந்தால் ஒரு தே. கரண்டி அரிசி மாவு கலந்து உபயோகிக்கலாம்.
மாவு ஓரளவுக்கு இலகுவாக இருக்கவேண்டும், கெட்டியாக இருந்தால் தோசை கடினமாக இருக்கும்.
தயிரை கடைந்தபின் மாவில் சேர்த்தால் கட்டி தட்டாது.
வேண்டுமளவு தயிர் சேர்த்துக்கொள்ளுங்கள் தோசையின் மென்மை கூடும். அளவுக்கதிகமானால் புளித்துவிடும் கவனம்.
சுவை நன்றாக இருக்க சூடாக இருக்கும்போதே உண்ணுங்கள். அவ்வளவுதான்.

Entry Filed under: சிற்றுண்டி வகை. குறிச்சொற்கள்: , , .

3 Comments Add your own

  • 1. துளசி கோப&hellip  |  மே 23, 2008 at 3:49 பிற்பகல்

    ஏமண்டி…. இதி பெசரட்டுக் காதா? :-)

    பதில்
  • 2. கீதா  |  மே 23, 2008 at 8:45 பிற்பகல்

    வாங்க :)

    வணக்கம்

    இது ஒரு வட இந்திய உணவு வகை. என் தோழி சொன்னது.

    பெசரட் செய்ய தயிர் உபயோகிப்பார்களா தெரியலை.. ஆனா அதுவும் பயத்தம்பருப்பில்தான் செய்வார்கள்..

    அன்புடன்
    கீதா

    பதில்
  • 3. Shree  |  ஜனவரி 26, 2009 at 11:38 மு.பகல்

    and moreover for Pesarattu – the Full payatham paruppu should be used (the green one)

    பதில்

Leave a Comment

Required

Required, hidden

Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


பக்கங்கள்

அண்மைய இடுகைகள்

வகைகள்

வகை மேகம்

கறி/கூட்டு குழம்பு வகைகள் கொரிக்க சட்னி/chutney சாத வகைகள் சிற்றுண்டி வகை பலகார வகைகள் வாங்க பேசலாம் Uncategorized

என் மற்ற தளங்கள்

மேல்