Posts filed under 'சட்னி/chutney'
கேரட் சட்னி / carrot chutney
தேவையான பொருட்கள்
கேரட் – 4
பச்சை மிளகாய் – 3
பூண்டு – 3 பற்கள்
புளி – நெல்லிக்காய் அளவு
எள் – 1 தே. கரண்டி
சீரகம் – 1 தே. கரண்டி
தேங்காய் துருவல் – 3 தே. கரண்டி (தேவைப்பட்டால்)
உப்பு – தேவையான அளவு
கடுகு, உளுந்து, பெருங்காயம் – தாளிக்க
எண்ணை – சிறிதளவு
செய்முறை
கேரட்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலியில் எள், சீரகம் இவற்றை எண்ணை விடாமல் வறுத்து எடுத்து பொடித்து வைத்துக்கொள்ளவும்.
வாணலியில் சிறிது எண்ணை விட்டு பூண்டு, பச்சைமிளகாய், கேரட், தேங்காய் துருவல் ஆகியவற்றை முறையே போட்டு நன்றாக வதக்கி எடுக்கவும்.
கேரட் கலவையுடன் எள், சீரகப் பொடி, உப்பு, புளி இவற்றைச் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்றாக அரைத்தெடுக்கவும்.
ஒரு வாணலியில் சிறிது எண்ணை விட்டு கடுகு, உளுந்து, பெருங்காயம் போட்டு தாளித்து சட்னியில் கலக்கவும்.
கேரட் சட்னி தயார். இது ரவா உப்புமா, இட்லி உப்புமாவுக்கு அருமையாக இருக்கும். இட்லி தோசைக்கும் நன்றாகவே இருக்கும்.
8 comments மே 31, 2008
கத்திரிக்காய் சட்னி
(4 பேருக்கு)தேவையான பொருட்கள்
_________________________________
பெரிய கத்திரிக்காய் – 5
வரமிளகாய் – 8 (தேவைக்கேற்ப குறைத்துக்கொள்ளவும்)
உளுந்து – 2 தே. கரண்டி
புளி – சிறிதளவு
உப்பு தேவையான அளவு
சர்க்கரை – 1 தே.கரண்டி (விருப்பமானால்)
கடுகு,உளுந்து,பெருங்காயம் – தாளிக்க
எண்ணை – தாளிக்க
செய்முறை
___________
* கத்திரிக்காயின் தோலைச்சுற்றிலும் சிறிதளவு எண்ணை தேய்த்து அடுப்புத் தீயில் நன்றாக சுட்டு எடுக்கவும். மேல் தோல் கறுப்பாக மாறிவிடும், உரிப்பதற்கும் ஏதுவாக இருக்கும். ( சுட்டு எடுக்க முடியவில்லையென்றால் ஒரு வாணலியில் போட்டு எல்லா பக்கமும் நன்றாக வறுத்து எடுக்கவும்)
*கத்திரிக்காயின் மேல் தோலை நீக்கிவிடவும்.
*ஒரு வாணலியில் சிறிது எண்ணை ஊற்றி அதில் வரமிளகாய் போட்டு வறுத்து தனியே எடுத்து வைக்கவும். பின்னர் உளுந்து போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
*மிக்ஸியில் வரமிளகாய்,உளுந்து,புளி,உப்பு,சர்க்கரை ஆகியவற்றை போட்டு நன்றாக மசிய அரைக்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.
*மசிந்தபின் அதில் உரித்து வைத்திருக்கும் கத்திரிக்காயை சேர்த்து அரைத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் சேமிக்கவும்.
*ஒரு வாணலியில் எண்ணைவிட்டு அதில் கடுகு, உளுந்து, பெருங்காயம் போட்டு தாளித்து பின்னர் அரைத்து வைத்த விழுதை சேர்த்து கிளறிவிடவும். மேலே கொத்துமல்லி தூவி அலங்கரிக்கவும்.
இது இட்லி, தோசைக்கு அருமையாக சேரும்.
4 comments ஏப்ரல் 26, 2008