Posts filed under 'சிற்றுண்டி வகை'
முள்ளங்கி சப்பாத்தி/ mooli paratha
தேவையான பொருட்கள் – 2 பேருக்கு
முள்ளங்கி – 3
பச்சை மிளகாய் – 2 சிறிதாக நறுக்கியது
கொத்துமல்லி தழை – சிறிதளவு நறுக்கியது
மிளகாய் தூள் – 2 தே. கரண்டி
உப்பு தேவையான அளவு
எண்ணை சிறிதளவு
கோதுமை மாவு – 2 கப்
செய்முறை
முதலில் கோதுமை மாவை உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக்கொள்ளவும்.
(சப்பாத்தி மிருதுவாக இருக்க வெந்நீர் உபயோகியுங்கள்.. சிறிதளவு நெய்யும் சேர்க்கலாம்)
முள்ளங்கிகளை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.
முள்ளங்கித்துருவலைப் பிழிந்து அதிலுள்ள நீரை நீக்கவும்.
(உங்களுக்கு விருப்பமானால் இந்த நீரை உபயோகித்தும் சப்பாத்தி மாவு பிசையலாம், பிசைந்த மாவை 1 மணி நேரம் ஊரவிடுவது சப்பாத்தியை மிருதுவாக்கும்)
ஒரு பாத்திரத்தில் இந்தத் துருவல், பச்சை மிளகாய் இவற்றறப் போட்டு நன்றாக வதக்கவும் பின்பு மிளகாய் தூள், உப்பு, கொத்துமல்லி சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
சப்பாத்தி மாவை பெரிய உருண்டைகளாக உருட்டவும்.
வட்டமாக சப்பாத்தி இட்டு அதில் இரண்டு தே.கரண்டி முள்ளங்கி கலவையை வைத்து உருட்டி கணமான சப்பாத்தியாக இடவும்.
சிறிது எண்னை விட்டு சப்பாத்திகளை சுட்டெடுக்கவும்.
தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.
Add comment செப்டம்பர் 9, 2009
பயத்தம்பருப்பு தோசை/ மூங் தால் தோசை / moong dal dosai
தேவையான பொருட்கள் 2 பேருக்கு
பயத்தம்பருப்பு [சிறுபருப்பு] – 1 கப்
தயிர் – 1/2 கப்
பச்சை மிளகாய் – 5 அல்லது 6
பூண்டு – 3 அல்லது 4 பல்
உப்பு தேவையான அளவு
செய்முறை
பயத்தம் பருப்பை தாராளமாக தண்ணீர் விட்டு 5 அல்லது 6 மணி நேரம் ஊரவிடவும்.
நன்கு ஊரியதும் பச்சை மிளகாய், பூண்டு,தண்ணீர் சேர்த்து மிருதுவாக அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த மாவில் தயிர்,உப்பு சேர்த்து நன்றாக தோசை மாவு பதத்திற்கு கலந்து வைத்துக்கொள்ளவும்.
தோசைகளை வார்த்து எடுத்து தேங்காய் சட்டினியுடன் சூடாக பரிமாறவும்.
குறிப்பு
மாவில் தண்ணீர் அதிகமிருந்தால் ஒரு தே. கரண்டி அரிசி மாவு கலந்து உபயோகிக்கலாம்.
மாவு ஓரளவுக்கு இலகுவாக இருக்கவேண்டும், கெட்டியாக இருந்தால் தோசை கடினமாக இருக்கும்.
தயிரை கடைந்தபின் மாவில் சேர்த்தால் கட்டி தட்டாது.
வேண்டுமளவு தயிர் சேர்த்துக்கொள்ளுங்கள் தோசையின் மென்மை கூடும். அளவுக்கதிகமானால் புளித்துவிடும் கவனம்.
சுவை நன்றாக இருக்க சூடாக இருக்கும்போதே உண்ணுங்கள். அவ்வளவுதான்.
3 comments மே 23, 2008
ஃப்ரைட் இட்லி / fried idly
தேவையான பொருட்கள்
மீதமான இட்லிகள் : 5/6
மைதா மாவு : 5 தே. கரண்டி
மிளகாய்த் தூள்: 1 தே. கரண்டி (உங்கள் தேவைக்கு ஏற்ப)
பிரட் கிரம்ஸ்: 1/2 கப்
உப்பு : தேவையான அளவு
எண்ணை பொரித்தெடுக்க
செய்முறை:
இட்டிலியை 8 துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மைதாமாவு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும். (பஜ்ஜி மாவு பதத்திற்கு)
ஒரு அகலமான தட்டில் பிரட் கிரம்ஸை கொட்டி பரவலாக வைக்கவும்.
இட்டிலி துண்டுகளை மைதாமாவு கலவையில் புரட்டி, பிரட் கிரம்ஸில் புரட்டி தனியே வைக்கவும்.
அடுப்பில் வாணலி வைத்து எண்ணை ஊற்றி காய்ந்ததும் இட்டிலி துண்டுகளை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு நன்றாக வறுத்து எடுக்கவும்.
தக்காளி சாசுடன் மாலை உணவாக, தேனீர்/காஃபியுடன் பரிமாறலாம்.
உங்களுக்கு விருப்பனால்
வெங்காயம் – 1 (நீளவாக்கில் மெலிதாக நறுக்கியது)
தக்காளி – 1 (பொடிதாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 3அல்லது4
கடுகு,உளுந்து – தாளிக்க
உப்பு சிறிதளவு
தக்காளி சாஸ் – 2 தே. கரண்டி
ஃப்ரைட் இட்லி துண்டுகள்
வாணலியில் சிறிது எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு உளுந்து போட்டு தாளிக்கவும்.
பச்சை மிளகாய் , வெங்காயம், தக்காளி, ஆகியவற்றையும் போட்டு நன்றாக வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
நன்றாக வதங்கியதும் தக்காளி சாஸ் ஊற்றி கிளறவும்.
சிறிது நேரம் சென்றபின் ஃப்ரைட் இட்லி துண்டுகளை சேர்த்து கிளறிவிடவும்.
இதை அபெடைசராக பரிமாறலாம்.
3 comments மே 22, 2008
ரவா பொங்கல் / Rawa pongal
தேவையான பொருட்கள் (2 பேருக்கு)
_________________________________
ரவை – 1 கப்
பயத்தம் பருப்பு – 1/2 கப்
முந்திரி – சிறிதளவு
மிளகு – 1 தே. கரண்டி
சீரகம் – 1 தே. கரண்டி
இஞ்சி – சிறு துண்டு
பச்சை மிளகாய் – 1 அல்லது 2
உப்பு தேவையான அளவு
நெய் தாளிக்க
செய்முறை
___________
*நெய்யில் முந்திரி பருப்பை வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
*மிளகு , சீரகம் வறுத்து லேசாக பொடித்து தனியே வைக்கவும்.
*பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறிக்கொள்ளவும். இஞ்சியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
*ஒரு பாத்திரத்தில் 5 கப் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்துக்கொள்ளுங்கள்.
*பயத்தம் பருப்பை நெய்யில் லேசாக வறுத்து 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். முக்கால் பாகம் வெந்ததும் தனியே எடுத்து வைக்கவும்.
*ஒரு வாணலியில் நெய் ஊற்றி இஞ்சி பச்சை மிளகாய் போட்டு தாளித்து அதில் ரவையையும் கொட்டிக் கிளறுங்கள். வேண்டிய அளவு உப்பு சேருங்கள். பச்சை வாசனை போகும் வரை கிளறுங்கள்.
*அடுப்பை சிம்மில் வைத்து ரவையுடன் பயத்தம் பருப்பை கொட்டிக் கிளறி உடன் கொதித்த நீரையும் ஊற்றுங்கள். கெட்டிப்படாமல் நன்றாகக் கிளறி பாத்திரத்தை மூடி வைக்கவும்.
*சிறிது நேரம் கழித்து மிளகு, சீரகம்,முந்திரி ஆகியவற்றைக் கொட்டிக் கிளறவும், கறிவேப்பிலை தூவி இறக்கவும்.
*சூடாக தேங்காய் சட்டினியுடன் பரிமாரவும்.
அல்லது
பயத்தம் பருப்பை வேகவைத்து அதில் கொதித்த 5 கப் தண்ணீரை கலந்து வடிகட்டி அந்த பருப்புநீரைக்கொண்டும் செய்யலாம்.
3 comments April 29, 2008