முறுக்கு

ஏப்ரல் 3, 2008 at 10:56 முப 2 பின்னூட்டங்கள்

இது என் அம்மா சொன்ன ஒரு எளிமையான குறிப்பு.

தேவையான பொருட்கள்:
********************

அரிசி மாவு : 2 கப்
பொட்டுக்கடலை மாவு : 1 கப் (பொட்டுக்கடலையை மிக்சியில் அரைத்து சலித்துக்கொள்ளவும்)
சீரகம்: 2 தேக்கரண்டி
எள்ளு: 2 தேக்கரண்டி
பெருங்காயம்: சிறிதளவு
உப்பு: தேவையான அளவு
எண்ணை: முறுக்கு சுட தேவையான அளவு

செய்முறை:
**********
அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு, சீரகம், எள்ளு, பெருங்காயம், உப்பு ஆகிய அனைத்தயும் ஒன்றாக கலந்து அதில் கொஞ்சம் சூடான நீர் விட்டு பிசைந்து கொள்ள வேண்டும். (மாவு இலகுவாக இருக்க வேண்டும் கடினமாகவோ/அதிகம் தண்ணீரோ இருக்க கூடாது)

கடாயில் எண்ணையை ஊற்றி சூடானவுடன் அதிலிருந்து 5/6 தேக்கரண்டி எடுத்து மாவுடன் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

உங்கள் விருப்பப்படி முறுக்கு குழாயில் மாவு போட்டு பிழிந்து பொன்நிறமாக சுட்டு எடுக்கவும்.

அவ்வளவுதான். சூடான முறுக்கு, சுவையான முறுக்கு தயார்.

Advertisements

Entry filed under: பலகார வகைகள். Tags: , , .

வணக்கம் கோழி(சிக்கன்) மிளகு குழம்பு

2 பின்னூட்டங்கள் Add your own

 • 1. Ramya  |  12:54 பிப இல் ஏப்ரல் 29, 2008

  I love this recipe. Your recipes are very simple and easy to prepare. I tried many of them. They came out so good. Thanks for sharing.

  மறுமொழி
 • 2. கீதா  |  1:45 பிப இல் ஏப்ரல் 29, 2008

  நன்றி ரம்யா. ரொம்ப கடினமான வழிமுறைகள் எனக்கும் சரிவராது. 🙂

  அன்புடன்
  கீதா

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


பக்கங்கள்


%d bloggers like this: