தக்காளி முட்டைகோஸ் காரக் கறி

ஏப்ரல் 4, 2008 at 11:12 பிப 6 பின்னூட்டங்கள்

இந்த சமையல் குறிப்பை என் அம்மா (mother-in-law) செய்தபொழுது கற்றுக்கொண்டேன்.

தேவையான பொருட்கள்
********************
முட்டைகோஸ் – 1/4 கிலோ
தக்காளி – 1 சிறியது
வெங்காயம் – 1 சிறியது
மி. பொடி – 2 தே. கரண்டி
மஞ்சள் தூள் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
கடுகு – தாளிக்க

செய்முறை:
**********

முட்டைகோஸை 1/2 அங்குல நீளத்திற்கு நன்றாக நறுக்கிம்கொள்ளவும். தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

வாணலியில் சிறிது எண்ணை ஊற்றி கடுகு,உளுந்து போட்டு தாளித்து உடன் வெங்காயம் சேர்த்து வதக்கி பின் தக்காளியும் சேர்த்து நன்றாக வதக்கவும்.

மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள் இவற்றையும் உடன் சேர்த்து 1 நிமிடம் வதக்கி பின்னர் நறுக்கி வைத்துள்ள முட்டைகோஸையும் சேர்க்கவும்.

சிறிது தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வாணலியை மூடி அவ்வப்பொழுது கிளறி வரவும்.

தண்ணீர் நன்கு சுண்டியதும் ஒரு தேக்கரண்டி எண்னை விட்டு கிளறி 1 நிமிடம் வைத்திருந்து எடுக்கவும்.

தக்காளி முட்டைகோஸ் காரக் கறி தயார்.

குறிப்பு:
******
முட்டை கோஸ் சீக்கிரம் வெந்துவிடும் என்பதால் தண்ணீர் அளவுக்கதிகமாகாமல் இருக்கட்டும் இல்லையேல் overcook(தமிழ் பெயர் என்ன?) ஆகி பதார்த்தம் சுவையிழந்துவிடும்.

முட்டை விரும்பிகள் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி கிளறி 5 நிமிடம் வைத்திருந்து எடுக்கலாம். சுவை கூடும்.

உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கி சேர்க்கலாம். உடன் சிறிது புளி சேர்த்தால் இன்னும் சுவைக்கும்.

Advertisements

Entry filed under: கறி/கூட்டு. Tags: , , , , , .

கோழி(சிக்கன்) மிளகு குழம்பு கொஸ்து / பாம்பே சட்னி

6 பின்னூட்டங்கள் Add your own

 • 1. R A J A  |  9:34 பிப இல் ஓகஸ்ட் 12, 2008

  “முட்டைகோஸ் செய்முறை” என்று googleலில் தேடியபோது உங்களுடைய பக்கம் கிடைத்தது…..முட்டை, உருளைக்கிழங்கு சேர்க்காமல் செய்தேன்……ரொம்ப நல்ல வந்தது……..செய்முறை விளக்கத்திற்கு நன்றி.

  மறுமொழி
 • 2. gajalakshmi  |  6:45 முப இல் ஓகஸ்ட் 9, 2010

  suoer

  மறுமொழி
 • 3. gajalakshmi  |  6:46 முப இல் ஓகஸ்ட் 9, 2010

  nice

  மறுமொழி
 • 4. m.s.balakrishnan  |  4:29 முப இல் ஜனவரி 24, 2011

  i think this is easy to cook.

  மறுமொழி
 • 5. devakumar  |  11:11 பிப இல் பிப்ரவரி 14, 2012

  plz add picture nice dish super

  மறுமொழி
 • 6. bhuvana  |  9:24 முப இல் பிப்ரவரி 21, 2014

  super

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


பக்கங்கள்


%d bloggers like this: