கடலைமாவு கட்லெட்

ஏப்ரல் 25, 2008 at 1:46 பிப பின்னூட்டமொன்றை இடுக

தேவையான பொருட்கள்

கடலை மாவு : 1 1/4 கப்
உருளைக்கிழங்கு – 3
பச்சை மிளகாய் – 5
வெங்காயம் – 3
மிளகாய்த்தூள் – 1/2 தேக்கரண்டி
கடுகு,சீரகம், சோம்பு,உளுத்தம்பருப்பு – 1/2 தே.கரண்டி (ஒவ்வொன்றும்)
நெய் -சிறிதளவு
கறிவேப்பில், கொத்துமல்லி- சிறிதளவு
உப்பு தேவையான அளவு
எண்ணை – தேவையான அளவு

செய்முறை

பச்சைமிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, கொத்துமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். உருளைக்கிழங்கை வேகவைத்து எடுத்ஹ்து தோலுரித்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, சீரகம், சோம்பு ஆகியவற்றைப்போட்டுத் தாளித்துக்கொள்ளவும்.

பிறகு நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டுச் சிவக்க வதக்கிக்கொண்டு வேகவைத்த உருளைக்கிழங்கையூம் போட்டு வதக்கிக் கொள்ளவேண்டும்.

அதன்பின் மிளகாய்த்தூளையும் உப்பையும் போட்டு நன்கு மசித்துக்கொள்ளுங்கள். கடைசியாக கொத்துமல்லித்தழையையும் போட்டு நன்றாக கிளறிவிடுங்கள்.

ஒரு பாத்திரத்தில் கடலை மாவைக் கொட்டிச் சிறிது நீர்விட்டுக் கெட்டியாகப் பிசைந்து அதைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

அந்த மாவு உருண்டைகளை வட்ட வடிவில் தேய்த்துக்கொண்டு அவற்றின் நடுவே மசாலாவை வைத்து முக்கோண வடிவில் மடித்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணைவிட்டு காய்ந்ததும் கட்லெட்டுகளை ஒவ்வொன்றாக போட்டு எடுக்கவும்.

இதை தக்காளி சாஸுடன் பரிமாரலாம்.

Entry filed under: பலகார வகைகள். Tags: , , .

கட்லெட் (Vegetable cutlet) கத்திரிக்காய் சட்னி

பின்னூட்டமொன்றை இடுக

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


பக்கங்கள்