கத்திரிக்காய் சட்னி

ஏப்ரல் 26, 2008 at 9:45 பிப 4 பின்னூட்டங்கள்

(4 பேருக்கு)தேவையான பொருட்கள்
_________________________________

பெரிய கத்திரிக்காய் – 5
வரமிளகாய் – 8 (தேவைக்கேற்ப குறைத்துக்கொள்ளவும்)
உளுந்து – 2 தே. கரண்டி
புளி – சிறிதளவு
உப்பு தேவையான அளவு
சர்க்கரை – 1 தே.கரண்டி (விருப்பமானால்)
கடுகு,உளுந்து,பெருங்காயம் – தாளிக்க
எண்ணை – தாளிக்க

செய்முறை
___________

* கத்திரிக்காயின் தோலைச்சுற்றிலும் சிறிதளவு எண்ணை தேய்த்து அடுப்புத் தீயில் நன்றாக சுட்டு எடுக்கவும். மேல் தோல் கறுப்பாக மாறிவிடும், உரிப்பதற்கும் ஏதுவாக இருக்கும். ( சுட்டு எடுக்க முடியவில்லையென்றால் ஒரு வாணலியில் போட்டு எல்லா பக்கமும் நன்றாக வறுத்து எடுக்கவும்)

*கத்திரிக்காயின் மேல் தோலை நீக்கிவிடவும்.

*ஒரு வாணலியில் சிறிது எண்ணை ஊற்றி அதில் வரமிளகாய் போட்டு வறுத்து தனியே எடுத்து வைக்கவும். பின்னர் உளுந்து போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

*மிக்ஸியில் வரமிளகாய்,உளுந்து,புளி,உப்பு,சர்க்கரை ஆகியவற்றை போட்டு நன்றாக மசிய அரைக்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.

*மசிந்தபின் அதில் உரித்து வைத்திருக்கும் கத்திரிக்காயை சேர்த்து அரைத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் சேமிக்கவும்.

*ஒரு வாணலியில் எண்ணைவிட்டு அதில் கடுகு, உளுந்து, பெருங்காயம் போட்டு தாளித்து பின்னர் அரைத்து வைத்த விழுதை சேர்த்து கிளறிவிடவும். மேலே கொத்துமல்லி தூவி அலங்கரிக்கவும்.

இது இட்லி, தோசைக்கு அருமையாக சேரும்.

Advertisements

Entry filed under: சட்னி/chutney. Tags: , , , .

கடலைமாவு கட்லெட் (ச்)சில்லி சிக்கன் ஃபிரை/ chili chicken Fry

4 பின்னூட்டங்கள் Add your own

 • 1. vijaygopalswami  |  7:56 பிப இல் ஏப்ரல் 27, 2008

  //
  இது இட்லி, தோசைக்கு அருமையாக சேரும்
  //

  இது இட்லி வடைக்கு தெரியுமா!

  மறுமொழி
 • 2. vijaygopalswami  |  8:38 பிப இல் ஏப்ரல் 27, 2008

  வணக்கம்,

  கத்திரிக்காய் என்றால் எனக்கு உயிர். ஆனால் இதை செய்வதில் எனக்கு உள்ள பிரச்சினை என்னவென்றால், என்னிடம் மிக்சி இல்லை. கத்திரிக்காய், முழு உளுந்து இரண்டையும் வேக வைத்து மசித்துக்கொள்ளலாமா? 8 மிளகாய் எனக்கு கொஞ்சம் ஓவர். பாதியாக குறைத்துக்கொள்ளலாமா?

  விரைந்து பதிலளிக்கவும்.

  நன்றி!!!

  (முந்தைய மறுமொழி Just for Fun)

  மறுமொழி
 • 3. கீதா  |  11:04 பிப இல் ஏப்ரல் 27, 2008

  வாங்க விஜயகோபாலஸ்வாமி

  வணக்கம்

  மிக்ஸி இல்லைன்னா பரவாயில்லிங்க கத்திரிகாயை சுட்டு, தோல் நீக்கின பிறகு கையாலயே பிசைஞ்சிடலாம்.

  மிளகாய் உங்க விருப்பத்துக்கு ஏற்ப பயன்படுத்திக்கங்க.

  உளுந்து வேகவைத்து போட்டா சுவை எப்படி இருக்குமின்னு தெரியலைங்க…ம்ம் 2 ஸ்பூன் உளுந்து தானுங்களே அதை வறுத்து நல்ல கனமான காகிதத்திடையே வச்சி ஒரு பெரிய கல் அல்லது கனமான பொருள் கொண்டு இடித்து ஓரளவுக்கு பொடித்து பயன்படுத்தலாம். முயற்சி செய்து பார்த்துட்டு சொல்லுங்க.

  அன்புடன்
  கீதா

  மறுமொழி
 • 4. vijaya  |  11:04 பிப இல் ஏப்ரல் 3, 2009

  IT IS VERY TASTEY ITEM FOR DOASI&ITELE

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


பக்கங்கள்


%d bloggers like this: