ரவா பொங்கல் / Rawa pongal

ஏப்ரல் 29, 2008 at 9:22 முப 4 பின்னூட்டங்கள்

தேவையான பொருட்கள் (2 பேருக்கு)
_________________________________

ரவை – 1 கப்
பயத்தம் பருப்பு – 1/2 கப்
முந்திரி – சிறிதளவு
மிளகு – 1 தே. கரண்டி
சீரகம் – 1 தே. கரண்டி
இஞ்சி – சிறு துண்டு
பச்சை மிளகாய் – 1 அல்லது 2
உப்பு தேவையான அளவு
நெய் தாளிக்க

செய்முறை
___________

*நெய்யில் முந்திரி பருப்பை வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.

*மிளகு , சீரகம் வறுத்து லேசாக பொடித்து தனியே வைக்கவும்.

*பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறிக்கொள்ளவும். இஞ்சியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

*ஒரு பாத்திரத்தில் 5 கப் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்துக்கொள்ளுங்கள்.

*பயத்தம் பருப்பை நெய்யில் லேசாக வறுத்து 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். முக்கால் பாகம் வெந்ததும் தனியே எடுத்து வைக்கவும்.

*ஒரு வாணலியில் நெய் ஊற்றி இஞ்சி பச்சை மிளகாய் போட்டு தாளித்து அதில் ரவையையும் கொட்டிக் கிளறுங்கள். வேண்டிய அளவு உப்பு சேருங்கள். பச்சை வாசனை போகும் வரை கிளறுங்கள்.

*அடுப்பை சிம்மில் வைத்து ரவையுடன் பயத்தம் பருப்பை கொட்டிக் கிளறி உடன் கொதித்த நீரையும் ஊற்றுங்கள். கெட்டிப்படாமல் நன்றாகக் கிளறி பாத்திரத்தை மூடி வைக்கவும்.

*சிறிது நேரம் கழித்து மிளகு, சீரகம்,முந்திரி ஆகியவற்றைக் கொட்டிக் கிளறவும், கறிவேப்பிலை தூவி இறக்கவும்.

*சூடாக தேங்காய் சட்டினியுடன் பரிமாரவும்.

அல்லது

பயத்தம் பருப்பை வேகவைத்து அதில் கொதித்த 5 கப் தண்ணீரை கலந்து வடிகட்டி அந்த பருப்புநீரைக்கொண்டும் செய்யலாம்.

Advertisements

Entry filed under: சிற்றுண்டி வகை. Tags: , , .

பச்சரிசி ஹல்வா (Rice Halwa) பப்பாளி பழ அல்வா (Papaya halwa )

4 பின்னூட்டங்கள் Add your own

 • 1. ரூபா வெங்கடேஷ்  |  5:46 முப இல் மே 9, 2008

  ரொம்ப நல்ல இருந்தது. நன்றி கீதா.

  மறுமொழி
 • 2. தூயா [Thooya]  |  6:33 முப இல் மே 11, 2008

  நானும் முயற்சி செய்துள்ளேன். 🙂

  மறுமொழி
 • 3. கீதா  |  8:46 பிப இல் மே 23, 2008

  நன்றி ரூபா, தூயா 🙂

  மறுமொழி
 • 4. REVATHI  |  1:01 முப இல் ஓகஸ்ட் 31, 2010

  ALL MY FAMILY SAY VERY SUPER. THANK YOU

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


பக்கங்கள்


%d bloggers like this: