Posts filed under ‘கொரிக்க’

வாழைக்காய் சிப்ஸ்

தேவையான பொருட்கள்
********************
வாழைக்காய் : 3
மிளகு : 4 தே.க
உப்பு : தேவையான அளவு
எண்ணை : பொரித்தெடுக்க

செய்முறை:
**********
முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீரை தயாராக வைத்திருக்கவும்.

வாழைக்காயின் மேல்தோலை நீக்கி அதனை மெலியதாக வட்ட வடிவில் சீவி தண்ணீரில் போட்டுக் கொள்ளவும்.

ஒரு தூய்மையான (வெள்ளைத்)துணியின் மீது இந்த துண்டுகளை பரப்பி சிறிது நேரம் உலற விடவும்.

மிளகை (dry) மிக்ஸியில் போட்டு கொஞ்சம் மிருதுவாக பொடித்துக்கொள்ளவும். இதனுடன் தேவையான உப்பு சேர்த்து தயாரக வைத்திருக்கவும்.

வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்த பின் கொஞ்சம் தூண்டுகளை போட்டு பொரித்து எடுக்கவும். (எல்லாம் ஒரே சீராக ஒரு வகை மஞ்சள்/வெள்ளை நிறத்துக்கு மாறினதும்)

எடுத்தவுடனேயே ஒரு பாத்திரத்தில் போட்டு மேலே சிறிது உப்பு மிளகு கலவையை தூவி கலந்து வேறு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

இப்படியே எல்லா துண்டுகளையும் பொரித்து, உப்பு மிளகு கலந்து வைக்கவும்.

காற்று புகாத பாத்திரத்தில் போட்டு சேமிக்கலாம்.

குறிப்பு:
******
சூடாக பொரித்து எண்ணையிலிருந்து எடுக்கும்போதே உப்பு மிளகு கலந்தால் தான் சிப்ஸில் ஒட்டும் ஆறினால் ஒட்டாது.

மிளகுக்கு பதில் மிளகாய்தூளையும் பயன் படுத்தலாம். ஆனால் மிளகு காரம் நல்லது.

ஏப்ரல் 11, 2008 at 2:03 பிப 2 பின்னூட்டங்கள்


பக்கங்கள்