ஜவ்வரிசி கிச்டி (வட இந்திய உணவு வகை)

_DSC0379

தேவையான பொருட்கள்:-

ஜவ்வரிசி – 2 கப்

உருளைக் கிழங்கு – 1

வறுத்த வேர்கடலை – 1/2 கப்

பச்சை மிளகாய் – 3 (நீளவாக்கில் நறுக்கியது)

உப்பு தேவையான அளவு

சர்க்கரை – சிறிதளவு (விரும்பினால்)

எலுமிச்சைச் சாறு – சிறிதளவு (விரும்பினால்)

 

தாளிக்க:-

எண்ணை – தேவையான அளவு

சீரகம் – 1  தே. கரண்டி

கருவேப்பிலை – சிறிதளவு

மஞ்சள் தூள் – சிறிதளவு

கரம் மசாலா – சிறிதளவு

 

தயார் செய்தல்:

1. ஜவ்வரிசி:-

ஜவ்வரிசியை நன்றாக நீர் விட்டு அலசவும்.

ஜவ்வரிசி  மூழ்குமளவு நீர் விட்டு 8 மணி நேரம் ஊறவிடவும்.

எஞ்சிய நீரை வடிகட்டி விடவும். ஜவ்வரிசி தயார்.

காற்றுபுகாத பார்த்திரத்தில் அடைத்தால், இதை 2 வாரம் வரை குளிர்பதனப் பெட்டியில் சேமிக்கலாம்.

2. உருளைக் கிழங்கை வேகவைத்து, தோலுரித்து, சிறிய சதுரங்களாக நறுக்கவும்.

3. வேர்க்கடலையை நன்றாக வறுத்து கரகரப்பாக உடைத்துக் கொள்ளவும்.

 

செய்முறை:-

  •  கனமான பாத்திரத்ததை அடுப்பிலேற்றி, சிறிது எண்ணை விட்டு, காய்ந்ததும் சீரகம், பச்சை மிளகாய், கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
  •  உருளைக் கிழங்கு துண்டுகள் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
  •  மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
  •  ஜவ்வரிசி, வேர்க்கடலை சேர்த்து நன்றாக கிளறி மூடி விடவும்.
  •  மிதமான வெப்பத்தில் அவ்வப்பொழுது கிளறியபடி 15 நிமிடங்கள் வேக விடவும்.
  •  ஜவ்வரிசி மிகவும் மென்மையாக, கண்ணாடி போன்று தெரிந்தால் அடுப்பிலிருந்து இறக்கி விடலாம்.
  •  விரும்பினால் சர்க்கரை மற்றும் எலுமிச்சைச்  சாறு சேர்த்து பரிமாரவும்.

 

 

நவம்பர் 5, 2014 at 11:25 முப பின்னூட்டமொன்றை இடுக

புதினா சாதம் /Puthina Rice / Mint rice

PR

தேவையான பொருட்கள்

———————————

  1. அரைக்க

————————

புதினா தழை – 1 கப்

இஞ்சி, பூண்டு விழுது – 3 தே. கரண்டி

தேங்காய் துருவல் – 3 தே. கரண்டி

பச்சை மிளகாய் – 5

மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை விழுதாக அரைக்கவும்.

 

2.பாசுமதி அரிசி – 2 கப்

வேகவைத்து ஆறவைக்கவும்.

 

தாளிப்பு

————

ஏலக்காய்,லவங்கம்,நட்சத்திர சோம்பு – 3

முந்திரி வறுத்தது – 10

வெங்காயம் – 1 (நீள வாக்கில் நறுக்கியது)

எண்ணை தேவையான அளவு

 

 

செய்முறை

————–

*அடி கனமான பாத்திரத்தை அடுப்பிலேற்றி, அதில் சிறிதளவு எண்ணை ஊற்றி, காய்ந்ததும் ஏலம், லவங்கம், நட்சத்திர சோம்பு போட்டு தாளிக்கவும்.

*அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

*வெங்காயம் வதங்கியதும் அரைத்த புதினா விழுதை சேர்த்து வதக்கவும்.

*எண்ணை பிரிந்து வரும் சமயம் முந்திரி சேர்த்து அடுப்பை அனைக்கவும்.

*வேகவைத்த பாசுமதி அரிசியில் இந்த கலவையை கொட்டி கலக்கவும்.

*அப்பளம், தயிர்-வெங்காயம்-தக்காளி பச்சடியுடன் பரிமாரவும்.

 

 

ஏப்ரல் 16, 2013 at 2:19 பிப 3 பின்னூட்டங்கள்

பிடி கொழுகட்டை/வெல்லக் கொழுகட்டை/vellak kozukattai

தேவையான பொருட்கள்

பச்சரிசி மாவு – 2 கப்
வெல்லம் – 1 1/2 கப்
தேங்காய் – சிறிதளவு [சிறு பற்களாக நறுக்கியது]
ஏலக்காய் – சிறிதளவு

செய்முறை

அரிசி மாவை இட்லி குக்கரில் நீராவியில் வேகவைத்து எடுத்து வைக்கவும்.

வெல்லத்தை சறிதளவு தண்ணீரில் கரைத்து நன்றாகக் கொதிக்கவைத்து வடிகட்டவும்.

வெல்லக் கரைசல், தேங்காய், ஏலக்காய் ஆகியவற்றை அரிசி மாவில் கொட்டிக் கிளறவும்.

அரிசி மாவுக் கலவையைத் தொட்டால் கையில் ஒட்டாமல் வரவேண்டும். [பிசுபிசுப்பு இல்லாமல்]
தேவையானால் ஒரு தே.கரண்டி எண்ணை ஊற்றிக்கொள்ளவும்.

அரிசி மாவுக் கலவையை கைகளால் பிடித்து இட்லி குக்கரில் வைத்து 15 நிமிடம் வேகவிடவும்.
பிடிகொழுகட்டை தயார்.

குறிப்பு
வெல்லத்தின் அளவு உங்கள் சுவைக்கேற்ப கூட்டியோ குறைத்தோ போடலாம்.

திசெம்பர் 2, 2010 at 10:42 முப 2 பின்னூட்டங்கள்

Ribbon Pakoda / ஓலைப் பக்கோடா

தேவையான பொருட்கள்:-
———————————

கடலை மாவு – 3 கப்
அரிசி மாவு – 1 கப்
மிளகாய் தூள் – 5 தே கரண்டி (அ) தேவையான அளவு
உப்பு – தேவைக்கேற்ப
சோடாமாவு – சிட்டிகை அளவு
எண்ணை பொரித்தெடுக்க
முறுக்குக் குழாய், ரிப்பன் அச்சு

செய்முறை:
—————

*கடலைமாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய்த்தூள்,சோடாமாவு ஆகியவற்றை ஒன்றாக கலந்து சலித்து வைத்துக்கொள்ளவும்.

*தேவையான அளவு நீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்திற்கு பிசையவும்.

*காய்ந்த எண்ணை ஊற்றி மேலும் இலகுவாக பிசையவும்.

(கடினமாக இல்லாமல் பிழிவதற்கு ஏற்றவாரு இலகுவாக இருக்க வேண்டும் அதேசமையம் பிசுபிசுப்பின்றி இருக்கவேண்டும்)

*கடாயில் எண்ணை ஊற்றி, காய்ந்ததும் ரிப்பன் அச்சு கொண்டு எண்ணையில் பிழிந்து பொரிக்கவும்.

*செம்பொன்னிறமாக வந்ததும் எடுத்து ஆறவைத்துப் பரிமாறவும்.

நவம்பர் 11, 2010 at 5:11 பிப 1 மறுமொழி

எளிமையான/துரிதமான தக்காளிச் சாறு/சட்டினி

தேவையான பொருட்கள் (4 பேருக்கு)
———————————————-
தக்காளி – நன்கு பழுத்தது 4
பச்சை மிளகாய் – 4/5 (தேவைக்கேற்ப)
உப்பு – தேவையான அளவு
தாளிக்க – கடுகு,உளுந்து,எண்ணை, பெருங்காயத்தூள்,கறிவேப்பிலை இலைகள்

செய்முறை
————-

*தக்காளிப் பழங்களை கீறி 5 நிமிடம் மைக்ரோவேவ் அவனில் வேகவைக்கவும் (அ) பிரஷர் குக்கரில் சிறிதளவு நீர் விட்டு ஒரு விசில் வரும் வரை வேகவைக்கவும்.

*தக்காளிப் பழங்கள் ஆறியதும் தோலை உரித்துவிட்டு மிக்ஸியில் நன்றாக மசிக்கவும். (தண்ணீர் விட வேண்டாம்)

*கடாயில் சிறிதளவு எண்ணை விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் பெருங்காயத்தூள் போட்டு தாளிக்கவும்.

*தக்காளிச் சாற்றில் உப்பு, தாளிப்பு கொட்டி கிளறவும்.

சுவையான தக்காளிச் சாறு தயார். இது தோசை, இட்லிக்கு மிகவும் சுவையான ஜோடி.

நவம்பர் 11, 2010 at 2:54 பிப பின்னூட்டமொன்றை இடுக

பீட்ரூட் ஜாமுன் அல்வா

தேவையான பொருட்கள்
—————————
பீட்ரூட் – 1 (துருவியது)
குலாப் ஜாமுன் மிக்ஸ் – 4 தே. கரண்டி
காய்ச்சின பால் – 1 கப்
சர்க்கரை – 2/3 கப் (அல்லது தேவையான அளவு)
நெய் – 4 தே. கரண்டி
ஏலக்காய் தூள் – சிறிதளவு
முந்திரி துண்டுகள் – நெய்யில் வறுத்தது சிறிதளவு
தண்ணீர் – 1/2 கப்

செய்முறை
————

ஒரு கனமான பாத்திரத்தில் 2 தே. கரண்டி நெய் விடவும்.

நெய் உருகியதும் அதில் பீட்ருட் துருவலைப் போட்டு நன்றாக வதக்கவும்.

நன்றாக வதங்கியதும் தண்ணீர் விட்டு வேகவிடவும்.

தண்ணீர் சுண்டியதும் காய்ச்சின பால் விட்டு கிளறி வேக விடவும்.

நன்றாக கொதித்து வரும்போது குலாப் ஜாமுன் மிக்ஸ் தூவி நன்றாக கிளறவும்.

பால் சுண்டியதும் சர்க்கரை, 1 தே. கரண்டி நெய் விட்டு கிளறி விடவும்.

அல்வா சுருண்டு வரும்போது மீதமுள்ள நெய், முந்திரி, ஏலக்காய் தூவி கிளறவும்.

நெய் தடவிய கிண்ணத்தில் சேமிக்கவும்.

ஒக்ரோபர் 2, 2009 at 9:35 முப 1 மறுமொழி

முள்ளங்கி சப்பாத்தி/ mooli paratha

தேவையான பொருட்கள் – 2 பேருக்கு

முள்ளங்கி – 3
பச்சை மிளகாய் – 2 சிறிதாக நறுக்கியது
கொத்துமல்லி தழை – சிறிதளவு நறுக்கியது
மிளகாய் தூள் – 2 தே. கரண்டி
உப்பு தேவையான அளவு
எண்ணை சிறிதளவு
கோதுமை மாவு – 2 கப்

செய்முறை

முதலில் கோதுமை மாவை உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக்கொள்ளவும்.
(சப்பாத்தி மிருதுவாக இருக்க வெந்நீர் உபயோகியுங்கள்.. சிறிதளவு நெய்யும் சேர்க்கலாம்)

முள்ளங்கிகளை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

முள்ளங்கித்துருவலைப் பிழிந்து அதிலுள்ள நீரை நீக்கவும்.
(உங்களுக்கு விருப்பமானால் இந்த நீரை உபயோகித்தும் சப்பாத்தி மாவு பிசையலாம், பிசைந்த மாவை 1 மணி நேரம் ஊரவிடுவது சப்பாத்தியை மிருதுவாக்கும்)

ஒரு பாத்திரத்தில் இந்தத் துருவல், பச்சை மிளகாய் இவற்றறப் போட்டு நன்றாக வதக்கவும் பின்பு மிளகாய் தூள், உப்பு, கொத்துமல்லி சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

சப்பாத்தி மாவை பெரிய உருண்டைகளாக உருட்டவும்.

வட்டமாக சப்பாத்தி இட்டு அதில் இரண்டு தே.கரண்டி முள்ளங்கி கலவையை வைத்து உருட்டி கணமான சப்பாத்தியாக இடவும்.

சிறிது எண்னை விட்டு சப்பாத்திகளை சுட்டெடுக்கவும்.

தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.

செப்ரெம்பர் 9, 2009 at 1:48 பிப 1 மறுமொழி

பூந்தி லட்டு

தேவையான பொருட்கள்
————————-
கடலை மாவு – 2 கப்
எண்ணை – பூந்தி செய்ய
சக்கரை – 2 கப்
நெய் – 3 தே. கரண்டி
ஏலக்காய் தூள் – சிறிதளவு
முந்திரி, பாதாம் – சிறியதாக நறுக்கியது சிறிதளவு
காய்ந்த திராட்சை – சிறிதளவு
கச கசா – சிறிதளவு
மஞ்சள் நிறமி – சிறிதளவு (ஃபுட் கலர்)

ஜல்லி கரண்டி/பூந்தி கரண்டி/slotted spoon

செய்முறை:
————

கடலைமாவு, ஃபுட் கலருடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைக்கவும்.

வாணலியில் தேவையான அளவு எண்ணை ஊற்றவும்.

எண்ணை நன்கு காய்ந்ததும் பூந்தி கரண்டியை எண்ணை மேலாக பிடித்து சிறிதளவு கடலைமாவு கலவையை அதில் ஊற்றி பூந்திகளை பொரித்தெடுக்கவும்.

அதே சமயம் மற்றொரு பாத்திரத்தில் 2 கப் சர்க்கரை, 3/4 கப் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும். ( கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரலில் எடுத்துப் பார்த்தால் கம்பி போல் வரவேண்டும்)

நெய்யில் கச கசா, முந்திரி, பாதாம், திராட்சை பொரித்து நெய்யுடன் ஏலக்காய் சேர்த்து பாகில் கலக்கவும்.

பாகு, பூந்தி இரண்டையும் சூடாக இருக்கும்போதே ஒன்றாக கலக்கவும்.

கைப்பொருக்கும் சூட்டில் உருண்டைக்ளாக பிடித்து வைக்கவும். ஆறியதும் பரிமாறவும்.
(கையில் சிறிது நெய் பூசிக்கொண்டு லட்டு பிடிக்கவும்)

செப்ரெம்பர் 1, 2009 at 3:23 பிப 1 மறுமொழி

கேரட் சட்னி / carrot chutney

தேவையான பொருட்கள்

கேரட் – 4
பச்சை மிளகாய் – 3
பூண்டு – 3 பற்கள்
புளி – நெல்லிக்காய் அளவு
எள் – 1 தே. கரண்டி
சீரகம் – 1 தே. கரண்டி
தேங்காய் துருவல் – 3 தே. கரண்டி (தேவைப்பட்டால்)
உப்பு – தேவையான அளவு
கடுகு, உளுந்து, பெருங்காயம் – தாளிக்க
எண்ணை – சிறிதளவு

செய்முறை

கேரட்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

ஒரு வாணலியில் எள், சீரகம் இவற்றை எண்ணை விடாமல் வறுத்து எடுத்து பொடித்து வைத்துக்கொள்ளவும்.

வாணலியில் சிறிது எண்ணை விட்டு பூண்டு, பச்சைமிளகாய், கேரட், தேங்காய் துருவல் ஆகியவற்றை முறையே போட்டு நன்றாக வதக்கி எடுக்கவும்.

கேரட் கலவையுடன் எள், சீரகப் பொடி, உப்பு, புளி இவற்றைச் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்றாக அரைத்தெடுக்கவும்.

ஒரு வாணலியில் சிறிது எண்ணை விட்டு கடுகு, உளுந்து, பெருங்காயம் போட்டு தாளித்து சட்னியில் கலக்கவும்.

கேரட் சட்னி தயார். இது ரவா உப்புமா, இட்லி உப்புமாவுக்கு அருமையாக இருக்கும். இட்லி தோசைக்கும் நன்றாகவே இருக்கும்.

மே 31, 2008 at 9:47 பிப 11 பின்னூட்டங்கள்

உப்பு உருண்டை/ உப்பு கொழுகட்டை/ uppu urundai / uppu kozukattai

இது என் அம்மா எனக்குச்சொன்ன சமையல் குறிப்பு

தேவையான பொருட்கள்

புழுங்கல் அரிசி – 2 கப்
கடலை பருப்பு – 1/2 கப்
தேங்காய் – சிறிதளவு (சிறு பற்களாக நறுக்கியது)
கடலை பருப்பு – ஒரு பிடி
காய்ந்த மிளகாய் – 5
கடுகு, உளுந்து தாளிக்க
எண்ணை சிறிதளவு
உப்பு தேவையான அளவு

செய்முறை

அரிசியை , பருப்பை தண்ணீரில் 8 மணி நேரம் ஊரவிடவும்.

பருப்பை கரகரப்பாக அரைக்கவும். அரிசியை மிருதுவாக அரைத்து முன்னம் அரைத்த பருப்புடன் சேர்த்து, உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும்.

ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணை விட்டு அதில் கடுகு உளுந்து போட்டு தாளிக்கவும்.

பிறகு அதில் காய்ந்த மிளகாய், கடலை பருப்பு, தேங்காய் ஆகியவற்றைப் போட்டு வதக்கவும்.

கலவை நன்றாக வதங்கியதும் அதில் அரிசி, பருப்புக் கலவையைக் கொட்டிக் கெட்டியாகும்வரை கிளறவும்.

சிறிது நேரம் சென்றபின் அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.

ஓரளவு ஆறிய பிறகு அந்தக் கலவையை உருண்டைகளாக உருட்டி இட்லி குக்கரில் வைத்து(கொழுகட்டை வேகவைப்பது போல்) வேகவைத்து எடுக்கவும்.

சுவையான உப்புருண்டை தயார். இதை மாலை உணவாக பரிமாறலாம்.

மே 30, 2008 at 1:26 பிப 1 மறுமொழி

Older Posts


பக்கங்கள்