Ribbon Pakoda / ஓலைப் பக்கோடா

நவம்பர் 11, 2010 at 5:11 பிப 1 மறுமொழி

தேவையான பொருட்கள்:-
———————————

கடலை மாவு – 3 கப்
அரிசி மாவு – 1 கப்
மிளகாய் தூள் – 5 தே கரண்டி (அ) தேவையான அளவு
உப்பு – தேவைக்கேற்ப
சோடாமாவு – சிட்டிகை அளவு
எண்ணை பொரித்தெடுக்க
முறுக்குக் குழாய், ரிப்பன் அச்சு

செய்முறை:
—————

*கடலைமாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய்த்தூள்,சோடாமாவு ஆகியவற்றை ஒன்றாக கலந்து சலித்து வைத்துக்கொள்ளவும்.

*தேவையான அளவு நீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்திற்கு பிசையவும்.

*காய்ந்த எண்ணை ஊற்றி மேலும் இலகுவாக பிசையவும்.

(கடினமாக இல்லாமல் பிழிவதற்கு ஏற்றவாரு இலகுவாக இருக்க வேண்டும் அதேசமையம் பிசுபிசுப்பின்றி இருக்கவேண்டும்)

*கடாயில் எண்ணை ஊற்றி, காய்ந்ததும் ரிப்பன் அச்சு கொண்டு எண்ணையில் பிழிந்து பொரிக்கவும்.

*செம்பொன்னிறமாக வந்ததும் எடுத்து ஆறவைத்துப் பரிமாறவும்.

Entry filed under: சிற்றுண்டி வகை, பலகார வகைகள். Tags: , , , .

எளிமையான/துரிதமான தக்காளிச் சாறு/சட்டினி பிடி கொழுகட்டை/வெல்லக் கொழுகட்டை/vellak kozukattai

1 பின்னூட்டம் Add your own

  • 1. Rajarajeswari  |  1:15 முப இல் ஜூன் 20, 2011

    தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். தங்கள் கருத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.நன்றி.

    மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


பக்கங்கள்