கேரட் சட்னி / carrot chutney

மே 31, 2008 at 9:47 பிப 11 பின்னூட்டங்கள்

தேவையான பொருட்கள்

கேரட் – 4
பச்சை மிளகாய் – 3
பூண்டு – 3 பற்கள்
புளி – நெல்லிக்காய் அளவு
எள் – 1 தே. கரண்டி
சீரகம் – 1 தே. கரண்டி
தேங்காய் துருவல் – 3 தே. கரண்டி (தேவைப்பட்டால்)
உப்பு – தேவையான அளவு
கடுகு, உளுந்து, பெருங்காயம் – தாளிக்க
எண்ணை – சிறிதளவு

செய்முறை

கேரட்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

ஒரு வாணலியில் எள், சீரகம் இவற்றை எண்ணை விடாமல் வறுத்து எடுத்து பொடித்து வைத்துக்கொள்ளவும்.

வாணலியில் சிறிது எண்ணை விட்டு பூண்டு, பச்சைமிளகாய், கேரட், தேங்காய் துருவல் ஆகியவற்றை முறையே போட்டு நன்றாக வதக்கி எடுக்கவும்.

கேரட் கலவையுடன் எள், சீரகப் பொடி, உப்பு, புளி இவற்றைச் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்றாக அரைத்தெடுக்கவும்.

ஒரு வாணலியில் சிறிது எண்ணை விட்டு கடுகு, உளுந்து, பெருங்காயம் போட்டு தாளித்து சட்னியில் கலக்கவும்.

கேரட் சட்னி தயார். இது ரவா உப்புமா, இட்லி உப்புமாவுக்கு அருமையாக இருக்கும். இட்லி தோசைக்கும் நன்றாகவே இருக்கும்.

Entry filed under: சட்னி/chutney. Tags: , .

உப்பு உருண்டை/ உப்பு கொழுகட்டை/ uppu urundai / uppu kozukattai பூந்தி லட்டு

11 பின்னூட்டங்கள் Add your own

  • 1. padmashri  |  5:55 முப இல் நவம்பர் 24, 2008

    kerat satni kurippu super

    மறுமொழி
  • 2. chitra  |  7:05 முப இல் திசெம்பர் 1, 2008

    super

    மறுமொழி
  • 3. வலைப்பூக்கள் தளம்  |  7:05 முப இல் ஜனவரி 8, 2009

    Hi,

    We have just added your blog link to Tamil Blogs Directory – http://www.valaipookkal.com.

    Please check your blog post link here

    Please register yourself on the Tamil Blog Directory to update your new blog posts and bring before your work to the large

    base of Tamil readers worldwide.

    Thanks

    Valaipookkal Team

    மறுமொழி
  • 4. Viji  |  6:23 பிப இல் ஜனவரி 26, 2009

    காரட் சட்னி செய்முறைக்கு நன்றி. தங்கள் பதிவை http://www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். http://www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி

    மறுமொழி
  • 5. vasantha  |  12:32 முப இல் ஜூன் 7, 2009

    very nice

    மறுமொழி
  • 6. kannan  |  10:35 முப இல் ஓகஸ்ட் 9, 2009

    A good recipe.

    மறுமொழி
  • 7. Kannan  |  9:50 முப இல் ஓகஸ்ட் 16, 2009

    Good recipe

    மறுமொழி
  • 8. kiruthiga  |  12:50 முப இல் செப்ரெம்பர் 8, 2009

    good recipe very super

    மறுமொழி
  • 9. LOGESHWARI  |  1:50 முப இல் ஒக்ரோபர் 30, 2009

    carrot satni very super

    மறுமொழி
  • 10. இந்திரா  |  10:06 முப இல் ஜூலை 18, 2010

    உங்கள் சமையல் குறிப்பு எளிமையாகவும் சத்தானதாகவும் உள்ளது

    மறுமொழி
  • 11. karthik  |  6:59 முப இல் ஜனவரி 22, 2013

    கேரட் சட்னி, கேரட் அல்வா, கேரட் சாதம், மேலும் கேரட் உணவுவகைகளை தெரிந்துகொள்ள பார்வையிடுங்கள் http://www.valaitamil.com/carrot-chutney_8272.html

    மறுமொழி

Kannan -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


பக்கங்கள்