கோழி(சிக்கன்) மிளகு குழம்பு

ஏப்ரல் 3, 2008 at 2:37 பிப 4 பின்னூட்டங்கள்

நிறைய குறிப்புகளை செய்து பார்த்த பின் என் வசதிக்கேற்ப உருவான ஒரு குறிப்பு இது. என் அம்மாவின் யோசனை(tips) படி அருமையாக வந்தது.

தேவையான பொருட்கள்:
********************
சிக்கன் : 1/2 கிலோ
தயிர் : 1/4 கப்
மஞ்சள் தூள்: 1/2 தேக்கரண்டி

பெரிய வெங்காயம்: 2
தக்காளி பெரியது: 1
பூண்டு : 7/8 பல்
மிளகு: 1 1/2 தேக்கரண்டி
சீரகம்: 3 தேக்கரண்டி
உப்பு: தேவையான அளவு

தாளிக்க : பட்டை 1, இலவங்கம் 1, ஏலக்காய் 1, ப்ரிஞ்சி இலை 2, star anise -1 (தமிழ் பெயர் தெரியவில்லை)

செய்முறை:
**********
முதலில் இறைச்சியை நன்றாக அலசி சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதனை தயிர்,மஞ்சள், சிறிதளவு உப்பு இவற்றுடன் சேர்த்து பிசறி குறைந்தது 1/2 மணி நேரம் வைத்திருக்கவேண்டும் (marinate).

கனமான அடி கொண்ட பாத்திரத்தை அடுப்பில் வைத்து, மிளகு, சீரகத்தை தனித்தனியே வறுத்து எடுக்கவும். பிறகு சிறிது எண்ணை விட்டு பூண்டையும் வதக்கி எடுக்கவும்.

மிளகு சீரகத்தை முதலில் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து பின்னர் பூண்டு சேர்த்து ஒரு சுற்று சுற்றி அந்த விழுதை தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.

கனமான அடி கொண்ட பாத்திரத்தை அடுப்பில் வைத்து கொஞ்சம் எண்ணை விட்டு பட்டை முதலான மசாலவை போட்டு தாளித்து பின் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி உடன் தக்காளியும், உப்பும் சேர்த்து வதக்கவும்.

இவை நன்றாக வதங்கியதும் எடுத்து வைத்திருக்கும் சிக்கன்,தயிர் கலவையை இதில் சேர்த்து 2 நிமிடம் மூடி வைக்கவும்.

பின்னர் மிளகு,சீரகம் விழுதை உடன் சேர்த்து நன்றாக கிளறி 1 நிமிடம் வைக்கவும்.

தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 15/20 நிமிடம் பாத்திரத்தை மூடி கொதிக்கவிடவும்.

சுவையான கோழி மிளகுக் குழம்பு தயார்.

குறிப்பு: சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள செய்யும்பொழுது தண்ணீர் குறைவாக விடலாம்.
சிறிது எண்ணை சேர்த்து கடைசியில் 5 நிமிடம் கொதிக்க விட்டால் சுவையாக இருக்கும்.

முந்திரி பருப்பை ( 5 அல்லது 6 ) அரை மணி நேரம் ஊறவைத்து அரைத்து அந்த விழுதினை கலந்தால் குழம்பு சுவை கூடும்.

Entry filed under: குழம்பு வகைகள். Tags: , , , , , , , , , .

முறுக்கு தக்காளி முட்டைகோஸ் காரக் கறி

4 பின்னூட்டங்கள் Add your own

muthuraja -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


பக்கங்கள்